இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் காயத்தில் இருந்து மீண்ட நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனிலும் விளையாடினார். இந்நிலையில் முகமது ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது கடந்த 2014-ஆம் ஆண்டு ஷமி ஹசீம் ஜஹான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் நான்கு ஆண்டுகள் திருமண உறவில் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜஹான் தன்னை ஷமி துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்ட நிலையில் ஜஹான் ஜீவனாம்சம் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதாவது ஜஹான் மாதம் 10 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்ட நிலையில் 1.5 லட்சம் வழங்குவதற்கு அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த போது மாதம் 4 ரூபாய் ஜஹானுக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனால் ஜீவனாம்சமாக இனி மாதந்தோறும் ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு 4 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.