அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை அண்ணாமலை வழங்கவில்லை. அண்ணாமலையிடம் விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசியல்வாதிகளும் கூறும் கருத்துக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இது போன்ற கருத்துக்களை புறக்கணிக்க வேண்டும். இது போன்ற வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் 100 வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டியது வரும் என்று நீதிபதி கூறியுள்ளார்.