
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தொட்டணம்பட்டி பகுதியில் கரட்டுப்பட்டி உள்ளது. இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்ட சிமெண்ட் பூசம் பணிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தொழிலாளர்கள் வேலைக்காக அங்கு சென்றபோது உள்பகுதியில் மது பாட்டில்கள், சிகரெட் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர் போன்றவைகள் கிடந்தது. அதோடு பக்கபாட்டில் மனித கழிவுகளும் வீசப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மனித கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில் மது குடித்த கும்பல் அங்கு மனித கழிவுகளை வீசிசென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அந்த மர்ம கும்ப கும்பலை போல போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையில் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் அவர்களின் சிக்கக்கவில்லை. மேலும் வேங்கை வயல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கு இன்னும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.