
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் மற்றும் கார் ஓட்டுநருக்கு இடையில் நிகழும் கடுமையான வாக்குவாதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெண் ஒருவர், ஒரு காரை வாடகைக்கு எடுத்து பயணம் செய்து வந்துள்ளார். அவர் சொன்ன இடத்தை கூகுள் மேப் காட்டாத நிலையில், ஓட்டுநர் மேப்பில் காட்டப்படும் இடத்தில் இறக்குகிறார். ஆனால் பெண், “நான் சொல்லும் சரியான இடத்தில்தான் இறக்கணும்” என வலியுறுத்துகிறார்.
Kalesh b/w Cab driver and a female over location issues (Full Context in the Clip)
pic.twitter.com/rv4h6aUybA— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 28, 2025
இதற்கிடையில், ஓட்டுநரும், “நான் மேப்பில் இருக்கும் வரைதான் விடமுடியும்” என மறுக்கிறார். இதனால் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இறுதியில், அந்த பெண் பயணி, கட்டணம் செலுத்தாமல் நேரடியாக காரிலிருந்து இறங்கி சென்றுவிடுகிறார்.
இந்த வீடியோ “Ghar Ke Kalesh” என்ற X (முந்தைய Twitter) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரை இது 967க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல நூறு கமெண்டுகளையும் பெற்றுள்ளது. “132 ரூபாய்க்குத்தான் இவ்வளவு சண்டையா?”என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.