
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இக்கட்சி விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் தூதராக இருப்பவர் அதிகாரி எட்கர் பாங். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜயை நேற்று சந்தித்தார்.
A pleasure to meet Kollywood superstar #Thalapathy @actorvijay this afternoon. What is your favourite Tamil movie that he has starred in? – CG Pang pic.twitter.com/YNH153zATf
— Singapore in India (@SGinIndia) June 27, 2025
இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ரசிகருக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார். அதாவது தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய்யை நேற்று சந்தித்தேன். விஜய் நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் எது? என்று நெட்டிசன்களிடம் கேள்வியை எழுப்பி உள்ளார். இந்த சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.