
ஒரு மனைவி, தனது கணவனை வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை நேரில் கண்டதோடு இருவரையும் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. இந்த வீடியோவை ஒருவர் ஜூன் 25ஆம் தேதி தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ 37,000-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
வீடியோவில், கணவன் தனது காதலியுடன் படுக்கையில் இருப்பதைப் பார்த்த மனைவி அறைக்குள் புகுந்து, முதலில் கணவனை கையால் அடிக்கிறார். அதன் பிறகு அவருடைய காதலியை மின்விசிறியை எடுத்து வீசி தாக்குகிறார். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்யபட்டதை யாரோ ஒருவர் கேமராவில் படம் பிடித்ததாகத் தெரிகிறது.
இந்த வீடியோக்கு பலரும் கலகலப்பான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் “கலியுகம் உச்சத்தில் இருக்கிறது” என்றால், மற்றொருவர் “திருமணமே ஆபத்தானது” என்கிறார். “இப்போது யாரும் நம்ப முடியாத நிலைமையில்தான் இருக்கின்றோம்” என பலரும் பதில்கள் அளித்துள்ளனர். இச்சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Extra-Marital Affair Kalesh (Wife Caught her husband with someone else inside Room)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 25, 2025