
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தனெக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற இவர் உடல்நிலை கோளாரால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது சமீப காலங்களாக பாலிவுட் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தாவின் பத்தாம் வகுப்பு மார்க் சீட் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை எடுத்து மறு பதிவிட்ட நடிகை சமந்தா”இது மீண்டும் வந்து விட்டதா”என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே அந்த மார்க் சீட்டில் மற்ற பாடங்களை விட ஆங்கிலத்தில் மட்டும் 80 மதிப்பெண்ணிற்கு கீழ் சமந்தா மார்க் எடுத்துள்ளார்.
அதனை மேற்கோள் காட்டி நெட்டிசன்கள் பலரும் “பாவம் சமந்தாவுக்கே இங்கிலீஷ் வராது போல” என விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.