
ஆப்பிரிக்காவை சேர்ந்த பழங்குடியின மக்கள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது. அவர்கள் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து புகழ்ந்து பாடி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ஆச்சரியமாக பேசப்பட்டது.
இந்நிலையில் இதேபோன்று தற்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனின் போட்டோவை வைத்து பழங்குடியின மக்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதாவது அந்த பழங்குடியின மக்கள் ஒருவருக்கு தலா ரூ.4000 பணம் அனுப்பினால் அவர்கள் யாருடைய போட்டோவை வைத்து இப்படி புகழ்ந்து பேசி நடனமாடி வீடியோ வெளியிட வேண்டுமோ அதற்கு தகுந்தார் போன்று வீடியோ வெளியிடுவார்களாம்.
மேலும் இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள பதிவில் திமுகவின் ஆப்பிரிக்க வாடகை கும்பல். காசு கொடுத்தா வாசிப்பாக என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
Sattai Duraimurugan வாழ்த்திய ஆப்பிரிக்க பழங்குடியினர்| NTK | Maayavalai #SaattaiDuraimurugan #MaayaValai #AfricanTribe #CulturalExchange #Saattai #Duraimurugan #Africa #TribalCulture #Greetings #Honoring #TamilNadu #IndianPolitics #Brotherhood #mkstalin #dmk #ntk pic.twitter.com/OwwHbR4MUq
— Maaya Valai (@MaayaValai) June 21, 2025