
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. இவர் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவரது மகன் மனோஜ் சமீபத்தில் மாரடைப்பின் காரணமாக இளம் வயதில் காலமானார். இவரது மரணம் இயக்குனர் பாரதிராஜாவை மிகவும் பாதித்துவிட்து. தற்போது இயக்குனர் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் வெளிநாட்டில் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் மூத்த சகோதரியான தங்கத்தாய் (95) நேற்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக மரணமடைந்தார்.
அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் நிலையில் பாரதிராஜா தற்போது வெளிநாட்டில் சிகிச்சையில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் பாரதிராஜா வீட்டில் அடுத்தடுத்து சோகம் ஏற்பட்டுள்ளது ரசிகர்களையும் பிரபலங்களையும் கலங்க வைத்துள்ளது.