
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு முன்பு வெளியான இந்தியன் 2 திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் சங்கரின் அடுத்தடுத்த இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்தது. இவர் தற்போது இந்தியன் 3 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடித்த நிலையில், க்யாரா அத்வானி ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் எடிட்டர் சமீர் முகமது. இவர் தற்போது இயக்குனர் சங்கர் பற்றி கூறிய விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது, கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டிங் என்பது ஒரு பயங்கரமானது. அந்த படத்தை எடிட் செய்யும்போது படத்தின் ஆரம்ப நீளம் என்பது ஏழரை மணி நேரமாக இருந்தது. அதனை நான் மூன்று மணி நேரமாக குறைத்த நிலையில் 3 வருஷங்களுக்கு பிறகு என்னுடைய வேறுபடத்தின் காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன்.
எனக்கு துரதிஷ்டவசமாக சங்கருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையாக இல்லை. அது ஒரு பயங்கரமான அனுபவமாகவே இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் அவரின் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.