கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். இவர் நடிகர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருட வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் நடிகர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன்.

அவருடைய படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்து விடுவேன். எனக்கு கமல்ஹாசன் என்றால் உயிர். அவருடைய தோற்றம், சிரிப்பு மற்றும் கண் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் என் வீட்டிற்கு கமல்ஹாசன் வந்த போது அவர் என் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தபோது கமல்ஹாசன் கை கொடுப்போமா என்று கேட்டார். நான் கட்டி பிடிக்கலாமா என்று கேட்டதற்கு அவரும் என்னை கட்டிப்பிடித்தார். அதன் பிறகு நான் 3 நாட்களாக குளிக்கவே இல்லை. எனக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்காவில் ஆபரேஷன் நடந்த போது கமல்ஹாசன் என்னை அழைத்து பேசினார். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.

மேலும் அவருடைய படத்தில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்..