
பிரபல நடிகரான ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரவி மோகன், ஆர்த்தியின் பிரிவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் தனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் என ரவி மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு உத்தரவு பிறப்பித்தது.
இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர். ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாடகிக்கு கெனிஷா ரவி மோகன் விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பாலியல் வல்லுறவு மிரட்டல் மற்றும் ஆபாசமாக வசைபாடுதல், கொலை மிரட்டல் விடுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கெனிஷாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.