
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ராகுல் தேவ். இவர் தமிழில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து வேதாளம், குட் பேட் அக்லி போன்ற பல படங்களின் நடித்துள்ளார். இவரது சகோதரர் முகுல் தேவ் (54). இவர் ஹிந்தி, பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் உயிரிழந்தார்.
இவரது மறைவு திரை பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பிறந்த இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான தஸ்தக் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘யம்லா பக்லா தீவானா’ என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு 7-வது அம்ரிஷ் பூரி விருது வழங்கப்பட்டது.