
நாயகன் படத்தை அடுத்து கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம், கமல் இணைந்துள்ள படம் தான் தக் லைப். இந்த படத்தில் திரிஷா, அபிராமி, சிம்பு, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக அப்படக் குழுவினர் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அப்படத்தின் புரோமோஷனின் போது பேசிய நடிகர் சிம்பு கூறியதாவது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை 5 முறை பார்த்ததாக கூறியுள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது இப்போது எல்லாம் படத்தின் காட்சிகளை எளிதாக கட் செய்து பகிர்ந்து விடுகிறார்கள். அப்போது அந்த வசதி கிடையாது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் கடைசியாக வரும் என்ன சொல்லப் போகிறாய் நாதஸ்வர போர்ஷனை காண்பதற்காகவே அந்தப் படத்தை 4 முதல் 5 முறை பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.