
சென்னையில் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற இன்ஜினியரான இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான ரூ.230 கோடி பரிசுத்தொகை விழுந்தது.
அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் இது குறித்து பேசும்போது, “எனக்கு நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் மீண்டும் மீண்டும் எனது லாட்டரி டிக்கெட்டையும், வென்ற எண்களின் ஸ்க்ரீன்ஷாட்டையும் வைத்து பார்த்துக் கொண்டே இருந்தேன். முதன்முதலாக எனக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்துள்ளது. இதனால் எனக்கு அளவு கடந்த சந்தோஷம் இருக்கும் பட்சத்தில் சிறிது பயமும் உள்ளது. 70% மகிழ்ச்சி என்றால் 30 சதவீதம் பயம் இருக்கிறது.
ஏனென்றால் இதுபோன்று மிகப்பெரிய தொகையை நான் இதுவரை கையாண்டதில்லை. இந்த பணத்தை நான் புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காகவும், முதியோர் இல்லங்கள் கோவில்கள் போன்றவற்றிற்கு செலவழிப்பதாகவும் இந்த பணத்தை பயன்படுத்துவேன்” என்று கூறினார்.
மேலும் “வெற்றி பெற வேண்டுமென்றால் மக்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அதற்கான நடவடிக்கையை எடுக்க மாட்டார்கள். எனவே பொறுப்புடன் விளையாடுவது, தம்மால் இயன்றதை வாங்குவது, அனுபவங்களை அனுபவிப்பது மட்டுமே உத்தி.அதுதான் சந்தோஷம்”என்று கூறினார்.