கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் ஒரு 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்துவரும் நிலையில் இவர் கடந்த 18ஆம் தேதி தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் 2 பேருடன் சேர்ந்து தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்.

தியேட்டருக்கு செல்வதற்கு முன்பாக மாணவர்கள் இருவரும் மாணவியை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்த சென்றனர். அங்கு மற்றொரு ஆண் நண்பரும் வந்த நிலையில் பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து மது குடித்தனர்.

அந்த மாணவிக்கு மட்டும் அவர்கள் குளிர்பானம் கொடுத்த நிலையில் அதில் மயக்க மருந்து கலந்துள்ளனர். அந்த குளிர்பானத்தை குடித்த மாணவி சிறிது நேரத்தில் மயங்கிவிட்ட நிலையில் 3 பேரும் சேர்ந்து மாணவியை மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அந்த மாணவிக்கு மயக்கம் தெளிந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமைகளை நினைத்து அழுதார். அந்த மாணவியிடம் 3 பேரும் இது பற்றி வெளியே சொல்லக்கூடாது என கூறி மிரட்டியுள்ளனர். எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்த மாணவி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தன் பெற்றோரிடம் கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து மாணவியை வன்கொடுமை செய்த 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.