
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்திருந்தார். இதனால் அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. பும்ரா டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் இந்த தகவல் வெளியானது. அதே வேளையில் பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு சுப்மன் கில்லிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் சரியாக விளையாடவில்லை என்று விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியதாவது, அவர் அங்கு ரன்கள் அடிக்க வில்லை என பேசுவார்கள். வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்க வில்லை என்பது அடிக்கடி வரும் என்பது உங்களுக்கு தெரியும். அவ்வாறு சொல்பவர்களிடம் நீங்கள் அங்கு எவ்வளவு ரன்கள் அடித்தீர்கள் எவ்வாறு விளையாடினார்கள் என்று பாருங்கள் என்று சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.