நடிகர் ரவி மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை பிரிந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரவி மோகன், ஆர்த்தி பிரிவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ரவி மோகன் தனது வாழ்க்கையில் ஒளியேற்ற வந்தவர் கெனிஷா, ஆர்த்தி குடும்பத்தினர் என்னை பொன் முட்டையிடும் வாத்து போல தான் பார்த்தார்கள் எனக் கூறி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டார்.

தற்போது ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், துன்புறுத்தப்பட்டதாக தனிமைப்படுத்தப்பட்டதாக புகார் கூறும் ரவி மோகன் இத்தனை ஆண்டுகள் வரை ஏன் காத்திருந்தார்? தனது ரகசிய வாழ்க்கையை காப்பாற்ற முடியாமல் போனதால் தான் ரவி மோகன் வீட்டை விட்டு வெளியேறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Aarti Ravi (@aarti.ravi)

சொத்துக்களை கௌரவத்தை இழந்து வெறும் காலோடு ஒன்றும் ரவி மோகன் வீட்டை விட்டு வெளியேறவில்லை. தெளிவாக திட்டமிட்டு அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு 5 கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் தான் ரவி மோகன் சென்றார்.

ரவி மோகனுக்காக வாழாமல் எனக்காக நான் வாழ்ந்திருந்தால் இன்னும் வசதியாக வாழ்ந்து இருப்பேன். என்னை உதறித் தள்ள வேண்டும் என முடிவு எடுத்திருக்கும் போது அதை கண்ணியத்துடன் ரவி மோகன் கையாண்டு இருக்கலாம்.

அனைத்து வடிவத்திலும் என்னால் துன்புறுத்தப்பட்டதாக ரவி மோகன் சொல்கிறார். மனம் வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக கூறுவதை கேட்கும் போது வேதனையில் சிரிப்பு தான் வருகிறது. அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது அவரது விருப்பத்தினால் தான் இருந்திருக்க முடியுமே தவிர கட்டாயத்தினால் அல்ல.

உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று ரவி மோகன் நினைத்திருந்தால், எந்த சக்தியும் அவரைத் தடுத்திருக்க முடியாது. நிச்சயம் வந்து சந்தித்திருப்பார். கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும் தான் அவர் தன் பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறார்.

இன்று என் கண்ணியமும் நேர்மையும் ஒரு பொது விவாதமாக மாற்றப்பட்டிருப்பதை வேதனையோடு கடக்கிறேன். நான் இன்னும் நீதிமன்ற சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்க காத்திருக்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.