
பேராண்மை என்ற படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் யோகிடா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசையில் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சாய் தன்ஷிகா, வருகிற ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி விஷாலுக்கும், தனக்கும் திருமணம் என்று அறிவித்தார். அதன் பிறகு பேசிய இயக்குனர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது விஷாலை எனக்கு ரொம்ப பிடிக்கும். மனதில் எதையும் வைக்காமல் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசுவார். அவர் நடிகராவதற்கு முன்பே எனக்கு அவரை தெரியும். அவருடைய அப்பா எனக்கு நல்ல நண்பர் என்னிடம் நிறைய விஷயங்களை பேசுவார். அவர் பார்ப்பதற்கு தான் கொஞ்சம் கரடு முரடாக இருப்பார், ஆனால் குழந்தை தான். இந்த குழந்தையை நல்லா பார்த்துக் கொள்ளுங்கள் தன்ஷிகா என்று கூறினார்.