ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வரும் பஞ்சமி என்பவர், ஒரு கிராமத்தில் காட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தியவர்.

இந்த நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் சூரி, பஞ்சமியின் நிலையை அறிந்ததும், உணர்ச்சிவசப்பட்டு பாராட்டியதோடு, அவரது மூன்று மகன்களுக்கான கல்வி மற்றும் காது குத்து செலவுகளை தாம் ஏற்கப்போவதாக அறிவித்தார்.

25 வயதில் பஞ்சமி மூன்று ஆண் குழந்தைகளுக்கு தாயானார். சிறுவயதிலேயே தந்தையை இழந்துள்ளார் தனது மனைவியின் டான்ஸ் கனவே நிறைவேற்றுவதற்காக பஞ்சமியின் கணவர் ஊரின் எதிர்ப்பையும் மீறி அவரை டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்துள்ளார். இதுகுறித்து சூரி கூறும்போது, “மனைவிக்காக இவ்வளவு தியாகம் செய்கிறவர் கடவுளே” என உருக்கமாக பேசினார்.

இதையடுத்து, பஞ்சமி சூரியின் காலில் விழுந்து நன்றி கூற, சூரி “பெண்கள் யாருடைய காலிலும் விழக்கூடாது, உங்கள் குழந்தைகளின் படிப்பு நிறைவேற நாங்கள் இருக்கிறோம்” என்று தைரியம் கொடுத்தார்.

பஞ்சமி குடும்பத்துக்கு முன்பே நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உதவி செய்திருந்த நிலையில், இப்போது சூரி செய்த இந்த உதவியும், சமூக வலைதளங்களில் பெருமளவு பாராட்டுகளையும், ஆதரவும் பெற்றுள்ளது.