
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு 18 சதவீதமும், 2024 ஆம் ஆண்டு 4.83 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிலை கட்டணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3.16 சதவீதம் மின் கட்டண உயர்வு என்பதை எந்த வகையிலும் ஏற்க இயலாது என கூறியுள்ளார்.