
பிரபல நடிகர் மாஸ்டர் பரத்தின் தாயார் கமலாசினி இன்று காலமானார். சென்னையில் வசித்து வரும் மாஸ்டர் பரத்தின் தயார் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கமலாசினி உயிரிழந்தார். கமலாசினி இறப்பை அறிந்த திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்டர் பரத் சிறு குழந்தையாக மைடியர் பூதம் தொடரில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தமிழில் பஞ்சதந்திரம், போக்கிரி, உத்தம புத்திரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிப்பு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.