
ராணுவ கர்னல் சோபியா குரேஷி குறித்த பேச்சுக்கு மத்திய பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் ஷா கேட்ட மன்னிப்பை ஏற்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மிக மோசமான கருத்துக்களை பேசிவிட்டு “என்னுடைய பேச்சு மனதை புண்படுத்தி இருந்தால்…” என கூறி மன்னிப்பு வீடியோ வெளியிட்டார்.
மன்னிப்பில் கூட உண்மை தன்மை இல்லை. வழக்கிலிருந்து தப்பிக்க வீடியோ வெளியிட்டுள்ளார் என நீதிபதிகள் சூரியகாந்த், என்.கே சிங் அமர்வு காட்டமாக பதில் அளித்துள்ளது.