ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்த நிலையில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 112 ரன்கள் வரை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் பிறகு களம் இறங்கிய குஜராத் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கே.எல் ராகுல் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது நேற்றைய ஆட்டத்தில் 36-வது ரன் அடித்தபோது டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதனை தன்னுடைய 224-வது இன்னிங்ஸில் கே.எல் ராகுல் அடித்தார். இதற்கு முன்னதாக 243 இன்னிங்ஸில் விராட் கோலி 8000 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை தற்போது ராகுல் முறியடித்து விட்டார். அதோடு 8000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையையும் கேஎல் ராகுல் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேபோன்று மற்றொரு சாதனையையும் கே.எல். ராகுல் படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி சதம் விளாசிய வீரர் என்று பெருமையையும் பெற்றுள்ளார். அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய கேஎல் ராகுல் மும்பைக்கு எதிரான போட்டியின் போது 100 ரன்கள் எடுத்த ராகுல், 2020 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது 132 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு  மும்பை அணிக்கு எதிரான 2 போட்டியில் 103 ரன்களும், மற்றொரு போட்டியிலும் 103 ரன்களும் எடுத்திருந்தார். மேலும் நேற்றைய தினம் குஜராத்துக்கு எதிரான போட்டியின் போது 112 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதம் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.