தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த 1-ம் தேதி வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ரெட்ரோ படம்  235 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு உறுதிப்படுத்திய நிலையில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.