
ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து இன்று காலை 6:00 மணி அளவில் ஏற்பட்டது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறையினர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் 17 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த தீ விபத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.