தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நேற்று சாலையோரம் இருந்த ஒரு கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது சாலையோரம் இருக்கும் பள்ளங்கள் மற்றும் கிணறுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.