
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் கும்பரஹள்ளி கிராமத்தில் பிரவீன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு 23 வயது பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று இவர்களுக்கு ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. சுமார் காலை 10 மணி அளவில் பிரவீன் மணமகளுக்கு தாலி கட்டியநிலையில் பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென பிரவீன் மயங்கி விழுந்தார்.
அதாவது மாரடைப்பு ஏற்பட்டு பிரவீன் மயங்கி விழுந்த நிலையில் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனைக் கேட்டவுடன் குடும்பத்தினரும் மணமகளும் கதறி துடித்தனர். மணமகள் கதறி அழுதது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை சமாதானப்படுத்த முயன்றும் இயலவில்லை. இது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.