
பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் 1987-ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ரிலீசான நாயகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மா கதாபாத்திரமாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே மருத்துவர்கள். இதில் மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளைய மகள் பொதுநல மருத்துவராகவும் உள்ளனர்.
சரண்யாவின் இளைய மகள் தற்போது சென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றார். இது தொடர்பான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தங்களது மகள்களை வேறு துறையில் முன்னேற வைத்துள்ளார் என நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/saranya-ponvanan-daughter2-903251.jpg)