
காமெடி நடிகராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து சூரி கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தனக்கு ஏற்ற கதைகளையும், கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து சூரி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது சூரியின் நடிப்பில் மாமன் திரைப்படம் உருவாகியுள்ளது. அக்கா மகனுக்கும், சூரியனுக்கும் இடையேயான பாச பிணைப்பை உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் கூறும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
மாமன் திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் விலங்கு வெப் சீரிஸ் மூலம் பிரபலமானவர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாமன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் வெற்றி பெற முருகன் கோவிலில் சூரியன் பக்தர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டனர்.
இதுகுறித்து அறிந்து சூரி கோபப்பட்டு பேசியுள்ளார் அவர் கூறியதாவது மாமன் பட வெற்றிக்காக மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்கள் தம்பிகள் என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது. தம்பிகளா இது ரொம்ப முட்டாள்தனமான செயல். படம் நன்றாக இருந்தால் கதை நன்றாக இருந்தால் படம் ஓடும்.
அதை விடுத்து மண் சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்திருந்தாலும் ஓடிவிடுமா என்ன…? அதற்கு செலவு செய்த பணத்தில் நான்கு பேருக்கு தண்ணீர் உணவு வாங்கி கொடுத்து இருக்கலாம். மிகவும் வேதனையாக இருக்கிறது. இது போன்ற செயல்களை செய்பவர்கள் எனது ரசிகராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்கள் என கூறியுள்ளார்.