தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.digilocker.gov.in, www.tnresults.nic in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் மொத்தமாக 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகள் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கமாக மாணவர்களை விட மாணவிகள் தான் இந்த வருடமும் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் காரைக்குடி அருகே கோவிலூரில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த தர்ஷினி என்று சிறுமி தனது தம்பி, தங்கை கவனித்து கொண்டே பத்தாம் வகுப்பு படித்தார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 305 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் மூன்று பேரும் குடியிருந்த வீடு மழையில் இடிந்து விழுந்தது. இதனால் தன்னார்வலர்கள் சிறிய வீடு கட்டி கொடுத்தனர். தற்போது தர்ஷணியின் தங்கை 9-ஆம் வகுப்பும், தம்பி 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.