
இந்தியா-பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத உள்ளன. போர் பதற்றம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக ஊர் திரும்பினார்.
தற்போது ஐபிஎல் போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிட்டுப் போவது 9 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த மாத இறுதியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகிறது. தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்-யில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் முன்னணி வேகபத்துவீச்சாளரான மயங்க் யாதவ் காயம் காரணமாக எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் வேகப்பந்து பேச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரூ.3 கோடிக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.