
மதுரை மாவட்டம் வெள்ளரிபட்டியை சேர்ந்தவர் மதிவாணன்(45). இவர் வெள்ளரிபட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு அறையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதிவாணன் ஒரு சாலை விபத்தில் சிக்கினார்.
இதனால் அவரது காலில் அறுவை செய்து தகடு பொருத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களாக அதில் ஏற்பட்ட வலி காரணமாக மதிவாணன் நடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மதிவாணன் வழக்கம் போல வேலைக்கு சென்று யாரும் எதிர்பார்க்காத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதிவாணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.