கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் ஹரிஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ரவுடி. இவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் ஹரி தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மேலே நோக்கி சுட்டு அவரை மிரட்டியுள்ளார்.

இது பற்றி சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஹரியை பிடிக்க சென்றனர். அப்போது ஹரி போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்றதால்  காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ஹரிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் சூலூர் அருகே அரசூர் என்ற பகுதியில் நடந்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாவட்ட எஸ் பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.