
பறக்கும் விமானத்திலிருந்து மனிதனுடன் சேர்ந்து ஸ்கைடைவிங் செய்யும் சிங்கத்தின் காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில், சிங்கம் கால்கள் விரித்தபடி வானில் மிதந்து பயணிக்க, அதனுடன் ஒரு மனித ஸ்கைடைவர் துணையாக இருப்பதும் காணப்படுகிறது. இந்த வீடியோ, ஷில்லாங் அடிப்படையிலான @travelling.shillong என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.
இந்த சிங்க ஸ்கைடைவிங் செய்தது உண்மையா? ஏ.ஐ. அல்லது எடிட்டிங் வித்தைகளா என்ற கேள்விகள் பலரிடமும் எழுந்துள்ளன. ஏற்கனவே இந்த பக்கம், புலிகள், பூனைகள் ஸ்கைடைவிங் செய்வதுபோன்ற பல விலங்குகள் தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்திருந்ததால், இது ஒரு டிஜிட்டல் எடிட்டிங் போன்று உணர்த்துகிறது. ஆனாலும், இந்த வீடியோ 3.4 கோடி பார்வைகளைத் தாண்டி, பலரிடமும் ஆச்சரியத்தையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“இது உண்மைத்தான்… நான் தான் அந்த சிங்கம்!” என ஒருவர் கமெண்ட் செய்திருப்பதுடன், “இவங்க எப்படி சும்மா இருக்காங்க?” என்றும், “அண்ணா…யானையை ஒருமுறை முயற்சி பண்ணு” என்றும் பல நகைச்சுவையான கருத்துகள் குவிந்து வருகின்றன. உண்மையில் ஸ்கைடைவிங் என்றால் மக்களை வியக்க வைக்கும் செயல் தான்… ஆனால் ஒரு சிங்கம் அதில் பங்கேற்கிறது என்றால், அது இணையத்தில் வேற லெவலுக்கே சென்று விட்டது!