மும்பையின் மிரா ரோடு ரயில் நிலையம் அருகே, டிஜிட்டல் பேமெண்ட் விவகாரத்தை மையமாகக் கொண்ட பரபரப்பான சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 8:15 மணியளவில் நடைபெற்றது. அதாவது  28 வயதான ஒரு பெண் ஆட்டோவில் பயணித்தபோது, கட்டணமாக ரூ.51 பணம் செலுத்த தயாராக இருந்தார். ஆனால் கையில் ரூ.45 மட்டுமே இருந்ததால், மீதித்தொகையை UPI மூலம் செலுத்த முன்வந்தார்.

ஆனால், ஆட்டோ டிரைவர் அதனை நிராகரித்து முழுப் பணத்தையும் பணமாகவே தரும்படி வலியுறுத்தினார். பெண் நேரம் இல்லாத காரணத்தால் ரூ.45 ஐ சீட்டில் வைத்துவிட்டு வாகனத்திலிருந்து இறங்க முயன்றபோது, டிரைவர் அவரை பொதுமக்கள் முன்னிலையில் அநாகரிகமாக திட்டி தாக்கியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.