குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தில் குவாத்துவா பகுதியில் ஏப்ரல் 27ஆம் தேதி சிவாஜி சேனா சார்பில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட தங்க நகைகள் போலி என்று தெரியவந்ததால் இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது பொதுவாக வெகுஜன திருமண நிகழ்ச்சிகளில் தம்பதிகளுக்கு பரிசாக ஆடைகள், நகைகள் போன்றவைகள் வழங்கப்படும். அந்த வகையில் ராஜ்கோட்டில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சிகளும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்றவைகள் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் திருமணமான தம்பதிகள் தங்கள் வீட்டிற்கு சென்று நகைகளை பார்த்தபோது அது போலியானவை என்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது‌. அப்போது அவர்கள் ஒரு தங்க நகையும் வெள்ளி நகையும் போலியாக இருந்தது என்றால் அவற்றை நாங்கள் மாற்றி தர தயாராக இருக்கிறோம் என்று கூறியதோடு அவர்கள் மன்னிப்பு கேட்டும் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது