
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இரண்டு முறை 2360 ரூபாய் வரையில் குறைந்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் உயர்ந்து, ஒரு சவரன் 70,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் பிறகு ஒரு கிராம் 8765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை மேலும் ரூ. 720 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு சவரன் 70,840க்கும், ஒரு கிராம் 8,850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.