
உத்திர பிரதேச மாநிலம் புலந்த்சஹரில் 24 வயதுடைய அர்ஜூன் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு சென்ற 20 வயதுடைய கும்கும் என்ற பெண்ணை கடத்திச் சென்றதாக இளம் பெண்ணின் தந்தை சுரேந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அர்ஜுனின் வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தியுள்ளனர். மேலும் அவரது வீட்டை சேதப்படுத்தி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அச்சத்தில் அர்ஜுன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காணாமல் போன கும்கும் மோகித் என்ற வாலிபருடன் ஓடி சென்று நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்தது தெரியவந்துள்ளது.
இதனை அறியாத சுரேந்தர் அர்ஜுன் சிங் மீது புகார் அளித்ததால் கடைசியில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வந்தது.
இதுகுறித்து அர்ஜுன் சிங்கின் குடும்பத்தினர் கூறும்போது, போலீசார் சித்திரவதை செய்வார்கள் என்ற பயத்தில் அர்ஜுன் உயிரை விட்டதாகவும், கடைசி வரை இந்த வழக்குடன் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என் அர்ஜுன் கூறிக் கொண்டே இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.