கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஐந்தாம் வகுப்பு சென்றுள்ள நிலையில் கோடை விடுமுறை என்பதால் சென்னை பல்லாவரம் அருகே பம்பல் பகுதியில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான். நேற்று முன்தினம் காலை சிறுவனின் பாட்டி வேலைக்கு சென்று விட்ட நிலையில் மாலை வீட்டிற்கு திரும்பிய போது சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கினான். இதனை கண்டு சிறுவனின் பாட்டி அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்போனில் படம் பார்ப்பதை பாட்டி கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.