
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தமிழில் இவரது நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, கத்தி, தெறி போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு “புஷ்பா தி ரைஸ்” என்ற திரைப்படத்தில் வெளிவந்த “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடியது அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது இது குறித்து நடிகை சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்த பாடல் வாய்ப்பு எனக்கு வரும் போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால் என்னை ஒரு அழகான, கவர்ச்சியான பெண்ணாக ஒருபோதும் நான் நினைத்தது கூட இல்லை. அப்படி இருக்கும்போது இந்த வாய்ப்பு எனக்கு வந்ததை கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த சவாலை ஏற்க முடிவு செய்தேன். அதற்கு முன் நான் இது போன்ற கவர்ச்சியான பாடல்களில் ஆடியது கிடையாது. மேலும் இந்தப் பாடலின் படப்பிடிப்பு போது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன் என்று கூறினார்.