
சென்னையை சேர்ந்த சதீஷ்(35) என்பவர் சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை சதீஷ் விமானத்தில் சென்னைக்கு வந்தார். அங்கு குடியுரிமை சோதனை சுங்க சோதனை ஆகியவையே முடித்துவிட்டு தனது உடைமைகளுடன் வெளியே வந்தார்.
சதீஷை அழைத்து செல்வதற்காக அவரது குடும்பத்தினர் காரில் வந்திருந்தனர். இதனால் சதீஷ் கார் அருகே ட்ராலியை நிறுத்தி சூட்கேஸை காரில் வைக்க முயற்சி செய்தபோது பாம்பு கைப்பிடியில் சுற்றிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே அது நல்ல பாம்பா, கண்ணாடி விரியன் பாம்பா என அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அது தண்ணீர் பாம்பு வகையைச் சேர்ந்தது. விஷம் இல்லாதது தான். எனவே யாரும் பயப்பட வேண்டாம் என கூறினர். இதனையடுத்து மூன்று அடி நீளமுள்ள பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை புறப்பாடு போன்ற இடங்களில் பாம்பு இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. கிருமி நாசினி மருந்துகளை தெளித்து இடங்களை சுத்தமாக வைத்துள்ளோம்.
இதனால் சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் பாம்பு வந்தது என பயணிகள் அச்சப்பட வேண்டாம். அந்த காரில் பாம்பு இருந்திருக்கலாம். சதீஷ் காரில் வைக்கும் முயன்ற பொது பாம்பு சூட்கேஸில் ஏறி இருக்கலாம் என கூறியுள்ளனர்.