
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் இணைப்பு பெற்ற தனியார் சட்டக் கல்லூரிகளில் நடைபெறும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
மாணவர்கள் www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். BA LLB, BBA LLB, B. Com LLB, BCA LLB போன்ற படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 3,024 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.