பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் முடிவடைந்த அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக கூறிய எதையுமே சரியாக செய்யவில்லை. அவர்கள் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக கூறிவிட்டு அதையும் இரண்டரை வருடங்களுக்கு பிறகு தான் கொடுத்தார்கள்.

வீட்டு வரி மற்றும் சொத்து வரி போன்றவைகள் அதிகரிக்கும் நிலையில் இதனை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் வெகு விரைவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கண்டிப்பாக அடுத்த தேர்தலில் மாற்றம் வரும்.

திமுகவில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்ட நிலையில் தற்போதைய சூழலில் நாட்டுக்கு எதிராக பேசியவர்கள் மீது தமிழகத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்னும் நிறைய கால அவகாசம் இருப்பதால் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது.

நான் நடிகர் விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அனைவரும் ஒரு அணியில் திரள வேண்டும் என்று தான் கூறுகிறேன் என்று கூறினார். மேலும் திமுகவுக்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சிலர் கூறும் நிலையில் நடிகர் விஜயோ பாஜக மற்றும் திமுக இரண்டையும் விமர்சித்து வருகிறார்.  அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.