தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக திட்டமிட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக அது நடக்கவில்லை என்றார்.

2 ஹேங்ஸ்டர்கள் உள்ள அந்த திரைப்படத்தில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இருந்தது. அதனை கமல்ஹாசன் தயாரிப்பதாக திட்டமிடப்பட்டது.

தற்போது ரஜினியின் “ஜெயிலர்”, கமல்ஹாசனின் “விக்ரம்” போன்ற வெற்றி படங்களுக்கு பின் இந்த படத்தை இயக்குவது சாத்தியமில்லாத ஒன்று என்று கூறியுள்ளார். மேலும் விக்ரம் என்ற படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது “விக்ரம் 2” என்ற படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.