
தமிழ்நாட்டில் இனி வாரம் தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்த வாரம் முதல் அடுத்து வரும் ஜனவரி வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் ஒரு நாள் மருத்துவ முகாம்கள் நடைபெறும் நிலையில் இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் செயல்படும்.
இந்த மருத்துவ முகாம்களை இந்த மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடத்த முடிவு செய்துள்ளோம். இதனை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றார்.
மேலும் இந்த முகாம்களின் போது பெண்களுக்கு மார்பகப் புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆரம்பகட்ட கேன்சரை கண்டறிதல், காச நோய் மற்றும் தொழுநோய், இருதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படும் என்றார்.