
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் வழக்கம்போல் பணி முடிந்ததும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் இளம்பெண்ணிடம் லிப்ட் தருவதாக கூறி பைக்கில் அழைத்து சென்றார். ஆனால் அவர் ஒரு ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்த பெண் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் காண்டீபன் என்ற 34 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
மேலும் இவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.