கேரளா திருவனந்தபுரம் பகுதியில் அலியார் குஞ்சு என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இவர் கேரளாவில் இருந்து வேலை காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள அபுதாபிக்கு சென்றார். அங்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது லாட்டரி சீட்டு வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்த அவர் கடந்த 18ம் தேதி ஆன்லைன் மூலம் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கினார்.

இந்நிலையில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ரூ. 57 கோடி கிடைத்தது. தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை அறிந்த அலியார் குஞ்சு இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின்னர் இது குறித்து அவர் கூறும் போது “எனக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள்…. 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

நான் 40 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன். இனிமேல் சொந்த ஊரில் தொழில் செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன்” என்று கூறினார். மேலும் கேரள தொழிலாளர்கள் பலர் அபுதாபி லாட்டரி மூலம் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.