
சமூக ஊடகங்களில் பலரும் வியூஸ் மற்றும் லைக்ஸுக்காக பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த மிஷா அகர்வால் தனது பாலோவர்ஸ் குறைந்தால் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
நகைச்சுவையான வீடியோக்களை பதிவு செய்து வந்த மிஷா இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் குறைந்து வருவதால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது சகோதரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
View this post on Instagram
அதில் கடந்த வியாழக்கிழமை அன்று மிஈஷா இறந்து விட்டதாக கூறினார். மேலும் அந்த குறிப்பில் இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் பாலோவர்ஸ்யை மட்டுமே உலகமாக நினைத்த எனது சிறிய தங்கை 1 மில்லியன் பாலோவர்ஸ்களை அடைவது மற்றும் அன்பான ரசிகர்களை பெறுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார்.
ஆனால் அவரது பாலோவர்ஸ் குறைய தொடங்கிய போது, அவர் மன வேதனை அடைந்தார். அடிக்கடி என்னை கட்டிப்பிடித்து அழுது என் பாலோவர்ஸ் குறைந்து விட்டால் நான் என்ன செய்வேன் என்று அழுது இருக்கிறார். மிஷாவின் போன் வால்பேப்பர் எல்லாவற்றையும் கூறுகிறது. இன்ஸ்டா உண்மை உலகம் அல்ல. பாலோவர்ஸ் உண்மையான உறவுகள் அல்ல. தயவு செய்து இதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.