தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்  ஜனநாயகன் படத்தின் சூட்டிங்குக்காக இன்று மாலை மதுரைக்கு சென்றார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று காலை முதலே மதுரை ஏர்போர்ட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் குவிய தொடங்கிய நிலையில் விஜய் விமானத்திலிருந்து இறங்கி ஏர்போர்ட்டுக்கு வந்ததும் அவருக்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

 

கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் மதுரைக்கு வந்த நிலையில் அவர் விமானத்திலிருந்து இறங்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக கையசைத்து நடந்து வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் பிரச்சார வாகனத்தில் அதாவது திறந்த வெளி வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார். மேலும் நடிகர் விஜய் விமானத்திலிருந்து உற்சாகமாக குதித்து இறங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.